கூட்டமைப்பினர் எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் – கரவெட்டி பகுதி மக்கள் ஆதங்கம்!

Monday, January 15th, 2018

நாம் வாக்களித்து எமது வாக்குகளால் வெற்றிபெற்றவர்கள் இதுவரையில் எம்மை வந்து சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதனை தீர்த்துவைப்பதற்கான எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று கரவெட்டி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கரவெட்டிக்கு நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டு அந்த மக்களைச் சந்தித்தபோதே மக்கள் இவ்வாறு சுட்டிக்காட்டினர்.

இங்குள்ள மக்கள் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழேயே வாழ்ந்துவருகின்றோம். அன்றாடம் நாம் கூலி வேலை செய்தே எமது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிவரும் நிலையில் எமது வாழ்வு நிலை குறித்து எவரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை.

குறிப்பாக எமது வாக்குகளால் தேர்தல்களில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர். இன்று நாம் ஏதிலிகளாக பிறரது உதவிகளை நாடி வாழவேண்டிய துர்ப்பாக்கியத்திற்குள் வாழ்ந்துவருகின்றோம்.

அந்தவகையில் நீங்கள் எம்மீது கரிசனைகொண்டு எம்மை சந்திக்க வந்ததில் நாம் பெருமகிழ்ச்சியும் மன நிறைவுமடைகின்றோம். உங்களது வருகை எமது கிராமத்துக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என மக்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா  இங்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கணிசமானவற்றிற்கு உடனடியாக தீர்வுகள் காணப்படக்கூடியதான சாத்தியங்கள் இருக்கின்றபோதிலும் அவை தொடர்பில் வடக்கு மாகாணசபை அக்கறையற்றிருப்பதானது எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது.

எனவே வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் தாமே ஆளும் வகையில் அவற்றைக் கைப்பற்றி தமது பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எமது தலைமையின் கீழ் பிரதேச சபைகள் வென்றெடுக்கப்படும் பட்சத்தில் நாம் வழிகாட்டிகளாகவும் உறுதுணையாகவும் இருந்து இந்தப் பகுதிகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைத்து ஒர் இயல்பான சூழ்நிலையை தோற்றுவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

DSC_0209

Related posts: