கூட்டமைப்பினருக்குத் தகுந்த பாடம் புகட்டுவோம் – டக்ளஸ் தேவானந்தாவிடம் உடையார்கட்டு மக்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, January 9th, 2018

நாங்கள் வாக்களித்து எமது வாக்குகளால் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெறும் வாய்ப்பேச்சளவில் மட்டும்தான் இருக்கின்றார்களே ஒழிய செயலளவில் அவர்களிடம் எதையும் காணமுடியவில்லை என முல்லைத்தீவு மாவட்டம் உடையார் கட்டு பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல் காலங்களில் தமக்கான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தமது வெற்றிக்காகவும் எம்மிடம் வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவார்கள். அதுமாத்திரமன்றி தமது குரல்களை உயர்த்தி உரிமை, தாயகம், தேசியம் என்றெல்லாம் பேசி எமக்கு உணர்ச்சியை ஊட்டி லாபகமாக தேர்தல்களில் வெற்றிபெற்றுவிடுவார்கள்.

வெற்றிபெற்ற பின்னர் வாக்களித்த எம்மை மறந்து எம்மை  தெரியாதவர்களாகவும் அறியாதவர்களாகவும் இருந்துவிடுகின்றார்கள். ஆகையினால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டக் காத்திருக்கின்றோம்.

அந்தவகையில்தான் உண்மையில் மக்களுக்காக சேவை செய்யும் மக்களின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது கட்சியினது கொள்கையினையும் ஏற்றுக்கொண்டு வரவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு காத்திருக்கின்றோம் என்பதுடன் இந்த செய்தியை ஏனைய தமிழ் மக்களுக்கும் அறைகூவலாக விடுக்கின்றோம் என்றும் அந்த மக்கள் சுட்டிக்காட்டினர்.

Related posts:

தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயல...
தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் - பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் எட...