குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 6th, 2019

குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயம். என்றாலும், நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியதைப் போன்று இந்த நாட்டுக்கு – நாட்டின் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை கொடுத்துள்ள மற்றும் கொடுத்து வருகின்ற நபர்கள் தங்கியிருக்கின்ற நாடுகளுடன் இத்தகைய உடன்பாடுகள் விரைவில் எட்டப்படுமானால், அது இந்த நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதையே மீளவும் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற குற்றவாளிகளை ஒப்படைத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் கடன் இணக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

குறிப்பாக, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுடன் இந்த உடன்பாடுகளை எட்ட முடிந்தால் நல்லது. குறிப்பாக அர்ஜூன் மகேந்திரன் போன்றவர்களால் இந்த நாட்டின் பொருளாதாரமே பாரிய பின்னடைவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், போதைப் பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரும் எனக் குறிப்பிடப்படுகின்ற மாகந்துர மகேஸ் உள்ளிட்ட 25 பேர் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இராஜதந்திர முன்னெடுப்புகளை மேற்கொண்டு, இவர்களை இலங்கைக்கு கொண்டு வர இந்த அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதேபோன்று அர்ஜூன் மகேந்திரன் தொடர்பிலும் ஒரு பொறிமுறையினை மேற்கொள்வது தொடர்பிலும் அரசு ஆராய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம், இந்த குற்றவாளிகளை ஒப்படைத்தல் சட்டமானது அதனது, நோக்கங்களுக்கு புறம்பாக செயற்படாதிருப்பது தொடர்பிலும் அவதானங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. இச்சட்டமானது, கடந்தகால உரிமைப் போராட்டங்களில் தொடர்புபட்ட புலம்பெயர் மக்களை தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பழிவாங்கும் வகையில் அம் மக்களைப் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொது மன்னிப்பு என்கின்ற அடிப்படையில், ஓர் ஏற்பாட்டினை நீதி அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். 

Related posts:

சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் - நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரி...
புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
வன்னியின் பிரதிநிதிகள் தங்கள் வாழ்வை வளப்படுத்தியதே வரலாறு : மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!
தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிட...
நல்லாட்சியில் அதிபர் சேவை நியமனத்தில் அநீதி - நியாயம் பெற்றுத்தரக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...