குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் – ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!  

Wednesday, July 6th, 2016

மனித நேயத்தையும், சக மனித அன்பையும் உலக மக்களுக்கு உணர்த்துகின்ற புனிதமான நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புனித ரமழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஈத் முபாரக்…….

முப்பது நாட்கள் நோன்பு இருந்து, வாழ்வின் யதார்த்தத்தை உலகுக்கு உணர்த்தும் நோன்புப் பெருநாளில் இல்லாதவருக்கு கொடுத்து உண்ணும் மனிதநேய உணர்வை இஸ்லாம் வளர்க்கின்றது.

எல்லா மதங்களும் சரியான வழியையே மனிதனுக்கு காட்டுகின்றன. மனிதன் தனது இயலாமைகளையும், குரோதங்களையும் கடந்து சக இனத்தவர்களையும், மாற்று மதத்தவர்களையும் அரவணைத்தும், அணுசரித்தும் வாழ வேண்டும்.

அப்போதுதான் இன ஐக்கியமும், சகோதரத்துவமும், தேசிய நல்லிணக்கமும் மனித வாழ்வை வளப்படுத்தும்.

எனவே சிறப்பான வாழ்வுக்கு சரியான மார்க்கத்தை உணர்த்தும் இஸ்லாத்தின் புனித நோன்புப் பெருநாளில் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், மனித நேயமும் பொங்கிப் பெருகட்டும்.

நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் தெரிவித்துள்ளார்.

Related posts:

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் ச...
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட நிதியை பெற்றுக்கொள்ள...

கடமையை பொறுப்பேற்றுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் வா...
கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையில் எதுவும் நடக்கவில்லை -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் மீள் செலுத்தும் காலத்தை இயல்புநிலை வரும்வரை ஒத்திவைக்க வேண்டும் - அமை...