குருநகர் பகுதி மக்களது காணி உரிம பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்த  முயற்சிக்கு நீதி அமைச்சர் சாதகமான பதில்!

Wednesday, August 24th, 2016

யாழ்நகரை அண்டிய குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களுக்கு காணி உரிமம் பெற்றுக்கொடுப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச  சாதகமாக பதிலளித்துள்ளார்.

பல தசாப்த காலமாக குறித்த பகுதியில் நிரந்தரமான வீடுகள் அமைத்து வாழ்ந்துவரும் மக்கள் காணி உரிமம் இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதி மக்களது நிலைமை தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட பேச்சுவார்த்தையூடாக காணி உரிமங்கள் வழங்குவதற்கு பரிசீலிப்பதாக  நீதி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் வாழும் மக்களது தகவல்களை திரட்டி தருவதனூடாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தாவிடம் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்

இதனிடையே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகத்தின் பணிப்புரைக்கமைய சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களது பிரச்சினைகளின் தொகுப்பை டக்ளஸ் தேவானந்தா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவர்களது பார்வைக்கு கொண்டு சென்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: