குருநகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

யாழ் நகரை அண்டிய குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
குறித்த பகுதிக்கு நேற்றையதினம்(29) திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அங்குவாழும் மக்கள் காணி உரிமம் இன்மையால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்களது உணர்வுகளையும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது குறித்தபகுதி மக்கள் தெரிவித்ததாவது –
பல தசாப்த காலமாக குறித்த பகுதியில் தாங்கள் நிரந்தரமான வீடுகளை அமைத்து வாழ்ந்துவருவதுடன் பணங்கொடுத்தும் நிலங்களை வாங்கியுள்ளதாகவும் என்றோ ஒருநாள் தமக்கான காணிகளின் உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடிம் என்ற நம்பிக்கையில் 1992 ஆம் ஆண்டுகளிலிருந்து சோலைவரி உள்ளிட்ட நிதிகளையும் துறைசார்ந்தவர்களிடம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது தங்களை குறித்த வாழ் நிலங்களிலிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலகத்தால் வலியுறுத்தப்படுவதாகவும் இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மக்களது உணர்வுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே குறித்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அவர்களுடன் பேசி ஒரு இணக்கமான சூழ்நிலையை எற்படுத்தியுள்ளதாகவும் குறித்த பகுதி மக்களது வாழ்விடங்களுக்கான உரிமங்களுக்கான தீர்வுகளுக்கு விரைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|