குணசீலனுக்கு படிக்க முடியு மானால் சுகாதாரத்துறை பற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர்க ளின் நாடாளுமன்ற உரைக ளடங்கிய கட்டை அனுப்பி வைக்க முடியும் – ஈ. பி. டி. பி.

Thursday, February 1st, 2018
வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சராக இருக்கின்ற குணசீலன் என்பவர், ‘சுகாதாரப் பிரச்சினை தொடர்பில் எத்தனை தடவை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா?’ என்றொரு ஆச்சரியத்திற்குரிய கேள்வியை எழுப்பியுள்ளார்.
எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த காலங்களில் அமைச்சராக செயற்பட்டிருந்த நிலையில், வடக்கின் சுகாதாரத்துறை தொடர்பில் அவர் மேற்கொண்டிருந்த பணிகளை குணசீலன் அறிந்திராது விட்டாலும், அக்காலகட்டங்களில் வடக்கின் அனைத்து மருத்துவ மனைகளிலுமிருந்த நிர்வாகத் தரப்பினர் அதை அறிவார்கள்.
யாழ் போதனா மருத்துவ மனை உட்பட வடக்கின் அனைத்து மருத்துவ மனைகளினதும் வளர்ச்சியில் அவர் எடுத்துக் கொண்ட அக்கறையும், மேற்கொண்ட பணிகளும் அளப்பரியவை. இதனை குணசீலன் அவர்கள் அந்தந்த மருத்துவ மனைகளின் நிர்வாகத் தரப்பினரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். யாழ் போதனா மருத்துவ மனை இன்று கண்டிருக்கும் வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தா எமது செயலாளர் நாயகம் அவர்களே.
அதுமட்டுமின்றி யாழ்ப்பாணத்தில் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் விற்பனை யகத்தினை நிறுவ முக்கிய காரணமும் எமது செயலாளர் நாயகம் அவர்களே. கடந்த காலங்களில் அவர் அமைச்சராக செயற்பட்ட காலகட்டத்தில் வடக்கின் ஆளுநராக செயற்பட்டிருந்த ஜீ. ஏ. சந்திரசிறி அவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி, மாகாண சபையின் கீழுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவையான கட்டிடங்கள், மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் உட்பட அனைத்து தேவைகளையும், வசதிகளையும் செய்து கொடுத்திருந்தார். வடக்கு மாகாண சபையானது தேர்தலின் மூலம் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், அவர் மாகாண விடயங்களில் தலையிடுவதைத் தவிர்த்துக் கொண்டார்.
யாழ் போதனா மருத்துவமனையில் சிற்றூழியர்களாக எவ்விதமான கொடுப்பனவுகளுமின்றி தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 386 பேருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபா வீதம் கட்சி நிதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குத் தொடர்ந்து வழங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி பணியாளர்களில் 40 வயதினைக் கடந்திருந்த 5 பேர் தவிர்ந்த ஏனைய அனைவரையும் நிரந்தரப் பணியில் அமர்த்தினார்.
தற்போதைய அரசில் அவர் அமைச்சராக செயற்படாத நிலையிலும், நாடாளுமன்றத்தில் அவர் வலியுறுத்தியுள்ள விடயங்களில் சுகாதாரத்துறையும் முக்கியமானதாகும். உதாரணமாக, கடந்த வருடத்தைப் பொறுத்த வரையில் நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை தொடர்பில் 346 சந்தர்ப்பங்களில் பேசப்பட்டுள்ளன. இதில் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பங்களிப்புகளை வழங்கியிருந்தனர். இந்த 69 பேரில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 13வது இடத்தை வகிக்கின்றார். இதை குணசீலன் ‘மந்த்ரி.கொம்’ இணையத் தளத்திற்குள் நுழைந்து பார்த்துக் கொள்ள முடியும்.
இந்தக் காலகட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வடக்கின் சுகாதாரத்துறை தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு ஓர் உதாரணமாக கடந்த வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது, சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சு தொடர்பில் அவர் ஆற்றிய உரையினைப் பார்த்தவர்கள் வடக்கின் சுகாதாரத்துறை தொடர்பில் செயலாளர் நாயகம் அவர்கள் முன்வைத்த விடயங்கள் குறித்து நன்கறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம்.
அந்த உரையில், வடக்கின் மருத்துவமனைகள் சார்ந்த பௌதீக வளங்கள், மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர் பற்றாக்குறைகள், யாழ் பல்கலைக்கழக இணை மருத்துவப் பிரிவிலிருந்து வெளியேறுகின்ற தாதியப் பட்டதாரிகளைப் பதிவு செய்தல், தாதியர் ஆட்சேர்ப்பிற்கான நடைமுறை வயதெல்லையை 18 முதல் 32 வரை அதிகரித்தல், ஆங்கில பாடத்தில் ஆங்கிலத்தில் சீ திறமை பெறாதவர்களுக்கு அத் திறமையைப் பெற குறிப்பிட்ட கால அவகாசம் வழங்குதல், தாதியர் சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றபோது பின்னோக்கிய 10 வருட காலத்திற்குள் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தினை முடித்து, சித்தி பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குதல், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் விஞ்ஞான பாடமும் கட்டாயம் என்பதால், உயர் தரத்தில் ஏதாவது பாடங்களில் திறமைச் சித்தி பெறுகின்றவர்களுக்கு தாதியர் பணியில் வாய்ப்பளித்தல், தனியார்த்துறை தாதியர் பணிகளில் ஈடுபடுவோருக்கு, அரச தாதியர்களுக்கான பரீட்சைகளில் தோற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கி, அவர்களுக்கும் இடமளித்தல், தாதியர்கள், மருந்தகர்கள். ஆய்வுகூட மற்றும் இயன்முறை மருத்துவக் கற்கைகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் தனியான ஒரு துறையை ஏற்படுத்தல், யாழ் போதனா மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதித் தொகுதி நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்தல், சுமார் 2000 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதனா மருத்துவமனைக்கென குறைந்தது 300 கட்டில்களைக் கொண்ட சத்திர சிகிச்சைத் தொகுதி மற்றும் மகப்பேற்று கட்டிடத் தொகுதி அமைத்தல், நீண்ட காலமாக எவ்விதமான கொடுப்பனவுகளும் இன்றி தொண்டர்களாகப் பணிபுரிந்து வருகின்ற 820 மருத்துவமனை சிற்றூழியர்களின் பணிகளை நிரந்தரமாக்குதல், எச் ஐ. வி. தொற்று நோயாளர்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கான நவீன தொழில்நுட்ப சாதனங்கள், இணுவில் குழந்தைகள் மற்றும் சிறுவர் மருத்துவப் பிரிவின் நிர்மாணப் பணிகளைத் துரிதமாக்குதல், அம்புயலன்ஸ் வண்டிகளின் தேவை, வடக்கின் அனைத்து மருத்துவ மனைகளுக்குமான ஆளணிகளின் தேவைகளை தற்போதைய தேவைகளுக்கேற்ப அதிகரித்தல், ஆதார வைத்தியசாலைகளின் தேவைகள், தெல்லிப்பளை புற்றுநோய் மருத்துவமனையின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், டெங்கு நோய் அதிகரித்துள்ள நிலையில் ஆய்வுகூட நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், முதியோர்களுக்கென தனியானதொரு மருத்துவமனையை ஏற்படுத்தல், வெளிநாடுகளில் மருத்துவத்துறை கற்கைகளில் ஈடுபட்டு நாடு திரும்புகின்ற தமிழ் மொழி மூலப் பரிச்சயம் கொண்டவர்கள், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கற்கைகளை தொடரும்போது, அவர்களுக்கான மொழிபெயர்ப்பு வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவத்துறைக்கென யாழ் பல்கலைக்கழகத்தில்  தனியானதொரு பீடத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டதை குணசீலன் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும். இந்த விடயங்கள் அனைத்தும் ஓர் உரையில் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதைத்தவிர நிலையியற் கட்டளை 23ஃ2ன் கீழ் கேள்விகள், வாய்மொழி மூல வினா போன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் வடக்கின் சுகாதாரத்துறை தொடர்பில் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். குணசீலனுக்கு படிக்க முடியுமாக இருந்தால் அந்தக் கேள்விக் கட்டுகளை அனுப்பி வைக்க முடியும்.
இதையெல்லாம் அறியாமல், குருட்டு வாக்கில் மாகாண அமைச்சு பதவி கிடைத்துவிட்டதென்று அவர் இப்படி வரலாறு தெரியாமல் கதறக்கூடாது. தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்துக் கொள்ள அவர் முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

Related posts:

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுற - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...

ரத்னஜீவன் ஹூலின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் –...
மக்கள் விழித்தெழுவார்களாயின் விடியல் வெகு தொலைவில் இல்லை: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத...