குடும்பங்களை  தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் தேசிய மத்திய நிலையம் ஊடாக பூர்த்திசெய்யப்படும் –  டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகு பிரதமர் நடவடிக்கை!

Saturday, May 21st, 2016

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விதவைகள் மற்றும் குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி பிரதேச செயலர் பிரிவில் விதவைகளையும் பெண்களைக் குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களினதும் நலனுக்காக செயற்படும் தேசி மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டங்கள் தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியன செயற்படுத்துவதற்காக தற்போது செயற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனூடாக குறித்த பிரச்சினைக்குதீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிலையான கட்டளைகள் 23/2 இன் கீழ்  எழுப்பிய கோரிக்கைக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுதினம் நாடாளுமன்றத்தில் நிலையான கட்டளைகள் 23/2 இன் கீழ் டக்ளஸ் தேவானந்தா யுத்த சூழ்நிலை காரணமாக பெண்களின் தலைமை தாங்கும் குடும்பங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வருகின்ற நிலைமையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விசேட செயற்றிட்டங்கள் ஏதாவது உள்ளனவா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு இன்றையதினம் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை பெண்கள் பணியகத்தின் கீழ் செயற்படுகின்ற விதவைகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கான அவர்களது வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த 2015 ஆம் ஆண்டில் விசேட செயற்றிட்டத்தின் கீழ் 50 மில்லியன்களை முதலிட்டு 2008 பெண்கள் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்பட்டுள்ளனர்.

இலங்கை பெண்கள் பணியகத்தினால் 2016 ஆண்டில் பின்வரும் செயற்றிட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தப்படுகின்றன.

நிகழ்சித்திட்டம் 2015 இன் ஒதுக்கீடு ரூ. மில். 2016 இன் ஒதுக்கீடு ரூ. மில்.
1.யுத்த நிலை காரணமாக விதவைகள் குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள் உள்ள குடுப்பங்களின் சுயதொழில் முயற்சி செயற்றிட்டங்களுக்காக உதவி வழங்கலின் கீழ் வடக்கு கிழக்கு மாவட்டங்கள் 08 இல் பிரதேச செயலாளர் பிரிவுகள் 99 இல் பெண்கள் தலைமையிலான 321 குடும்பங்களுக்கு 100 நாள் விசேட செயற்றிட்டத்தின் கீழ் உதவி வழங்கப் பட்டது. 10
2.கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 0.3 0.152
3.வருமான உற்பத்தி வழிகளுக்காக ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 0.9125 0.252
4.வெளி நாட்டுக்கு செல்லும் பெண்களுக்காக மாற்று வருமான உற்பத்தி செயற்றிட்டங்கள் 0.4269 0.10
5. கைவினைப்  பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 0.3 0.40
6.  (திரிய தேதட சவியi)தரியமான கைகளை வலுவூட்டல் மீனவ மகளிருக்கான நிகழ்ச்சித்திட்டம் 0.625 0.25
7. ஆண் பெண் சமூக நிலை காரணமான துன்புறுத்தல்களை தடுக்கும் நிகழ்ச்சித்தி;ட்டம் 0.15 0.475
8.பெண்கள் பாதுகாப்பு மத்திய நிலையங்கள் 3 யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் செயற்படுகின்றன 38.00

மேலும் மேற்படி பிரதேசங்களில் உள்ளஇவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்டுள்ள  செயற்றிட்ட ஆலோசனைகளுக்காக உதவி வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள அதே சமயம் அவர்களது ஒத்துழைப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக விதவைகளான மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பெண்களை வலுவூட்டுவதற்காக SEWA (Self Employed for Women’s Association) இந்தி அரசின் கீழ் செயற்படுகின்ற  விசேட பெண்கள் திட்டம்  செயற்படுகின்றது இதன் கீழ் தேர்ந்தெடுக்க்பபட்ட விதவைகள் மற்றும் குடும்பத்தலைவிகளான பெண்கள் உள்ள குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

வழங்கப்பட்டுள்ளது.மேலும்அவ்வாறான பெண்களுக்காக சுயதொழிலில் ஈடுபட்டுள்ள  பெண்களின் கூட்டுறவு சங்கம்  (Eastern Province Women Self-employed development Cooperative society ltd) தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டம் அம்பாறை மாவட்டத்திலும் செயற்படுத்தப்படுகின்றது. இதனை வடக்கிலும் ஆரம்பிப்பதற்காக ரூபா மில்லியன் 200 செலவிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்த தேசிய ஒன்றிணைந்த நல்லிணக்க (ONOR) காரியாலயத்தை செயற்படுத்த அவுஸ்திரேலிய கவுன்சிலர் காரியாலயம், ஜ.நா.சனத்தொகை நிதியம் ஆகிய விருப்பம் தெரிவித்துள்ளன.

2016 வரவு செலவுத்திடடத்தில் தேசிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணங்கள்pல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்;வாதார அபிவிருத்திக்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின்கீ;ழ் ருபாமில்லியன் 435 ஒதுக்கியுள்ளது. ஒரு கிராம சேவகர் பிரவிற்கு ருபா மில்லியன் வீதம் ருபா மில். 1849 உம் ருபா மில்.2284 உம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக அரசு வடக்கு கிழக்கு தொடர்பாக சகல அரச மற்றும் மாகாண சபை உள்ளுராட்சிசபை தொண்டர் அமைப்புக்கள்’ அரச சார்பற்ற நிறுவனங்கள்’ ஆகியவற்றினால் வடக்கு கி;ழக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்துகின்றது.

மேலும் கௌரவ பிரதமரின் யப்பானிய விஜயத்தின் போது வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக சர்வதேச உதவி வழங்கும் குழுக்களின் மகாநாடொன்றுக்கான ஆலோசனை முன்வைக்கப்பட்ட அதே சமயம் மேதகு ஜனாதிபதியின யப்பானிய விஜயத்தின் பின்னர் அது தொடர்பான அறிக்கை பாரளுமன்றத்தில் பிரதமர் அவர்களினால் முன்வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts:

எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத...
இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரம்: விரைவில் இருதரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி: சிலதினங்களில் வவனியாவுக்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்க சுகாதார அமைச்சர் பணி...