குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் – பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டு!

Friday, January 12th, 2018

அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வோம் எனக் கூறி எமது வாக்குகளால் வென்று பூநகரிப் பிரதேச சபையை கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கான குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட உரிய அக்கறை காட்டவில்லை என பூநகரி செட்டியார் தரைவெளி பள்ளிக்குடா பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அப் பகுதி மக்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபோதே அவர்கள் இவ்வாறு தெரவித்துள்ளனர்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்லின் போது நீங்கள் எதிர்கொள்ளும் குடிநீர், பாதைப் புனரமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வோம் எனக் கூறியே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எம்மிடம் வாக்குக் கேட்டிருந்தனர்.

அவ்வாறு வாக்குக்கேட்டு எமது வாக்குகளால் பூநகரி பிரதேச சபையை கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாம் விடுத்திருந்த கோரிக்கைகளில் ஒன்றையேனும் தீர்த்துவைக்கவில்லை என்பதுடன் அவர்களால் நாம் ஏமாற்றத்தையே கண்டிருக்கின்றோம். அந்தவகையில்  இனிவருங்காலங்களில் அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம்

மாறாக மக்களுடன் நின்று மக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதே எமது நோக்கமாகும் என்பது மட்டுமன்றி காலத்தின் கட்டாயம் என்றும் அந்த மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டினர்.

மக்களது கோரிக்கைகளை கவனத்தில்கொண்ட டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் வாக்களித்து எமக்கான வெற்றியை உறுதிசெய்வார்களேயானால் நீங்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் நிச்சயம் நாம் நிரந்தர தீர்வுகளைப் பெற்றுத்தர தயாராக உள்ளோம் என்று தெரிவித்ததுடன்,

குறிப்பாக குடிநீர் பிரச்சினை என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்று என்பதை உங்கள் வாக்குகளால் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆதலினால் வரும் உள்ளூராட்சி தேர்தலில் எமது வெற்றியை உறுதி செய்து உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வென்றெடுத்துக் கொள்ளுங்கள் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்

இதனிடையே மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அக்கிராமத்திலுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட செயலாளர் நாயகம்  கறுக்காய் தீவு இறங்கு துறை பகுதிக்கும் சென்று கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை தெளிவுபடுத்தினார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
கிராம மட்டங்களில் கட்சியின் செயற்றிட்டங்களை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவோம் - டக்ளஸ் தேவானந்தா!
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...

எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...
இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ...