குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, June 22nd, 2018

யுத்தகாலத்தில்; ஸ்தம்பிதமாகிக்கிடந்த கூட்டுறவுத்துறையை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மீண்டும் உயிர்ப்படையச் செய்வதற்காக பல வழிகளிலும் நான் முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

எனது முயற்சிகளுக்கு அல் – ஹாஜ் அப்துல் றஹீம் முகையதீன் அப்துல் காதர் அவர்கள் கூட்டுறவு அமைச்சர் என்றவகையிலும் அங்கு மக்கள் எதிர்கொண்டிருந்த அவலங்களை உணர்ந்து கொண்டு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று விரும்பிய காரணத்தினாலும் எமது மக்களுக்காக செய்த உதவிகளை எமது மக்களும் நானும் மறக்கப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கம்பளைப் பிரதேசத்தின் பிரபல வர்த்தகராகவும் சமூக சேவையாளராகவும் இன மத வேறுபாடுகள் இன்றி சகல இன மக்களுக்கும் சேவையாற்றிய அல் – ஹாஜ் அப்துல் றஹீம் முகையதீன் அப்துல் காதர் அவர்கள் நான் அறிந்த மனித நேயமுடைய பண்பாளராவார். ஏறத்தாழ 15 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் சில வருடங்கள் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் இருந்து இலங்கையர்கள் அனைவருக்கும் அளப்பரிய சேவையாற்றினார்.

காதர் ஹாஜியார் அவர்கள் மார்க்க விடயங்களில் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக நடந்;து கொண்டதுடன் அன்னார் இலங்கையில் சமாதானமும் சக வாழ்வும் நிலவ வேண்டுமென்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் பிரார்த்தனைகளையும் செய்யும் ஒருவராக வாழ்ந்தவர்.

அன்னார் கூட்டுறவுத் துறை அமைச்சராக கடமையாற்றிய காலம் வடமாகாணத்தில் மக்கள் அனைவரும் போரின் தாக்கத்திற்குள்ளாகி அங்கும் இங்கும் சிதறி வாழ்ந்த காலமாகும். அக்காலத்தில் கூட்டுறவுத் துறை விநியோகம் பாரிய தடைகளையும; சிரமங்களையும் எதிர்கொண்டிருந்தது. மக்கள் உணவு வேண்டி அல்லல் பட்டுக் கொண்டிருந்தார்கள். அக்கால கட்டத்தில் நான் மக்களின் கஷ்;டங்களை அவருக்கு எடுத்துக் கூறி உதவிகள் கோரிய போதெல்லாம் மனமுவந்து மனித நேயத்துடன் மக்களுக்கு உதவி புரிந்தவராவார். மக்கள் சார்பான எனது வேண்டுகோள்களை நிறைவேற்றி தந்தவராவார்.

மிக நெருக்கடியான அக்கால கட்டத்திலும் கூட்டுறவுத்துறையை மக்களுக்கு பயன் உள்ளவகையில் செயற்படுத்தியதில் நாம் அயராது உழைத்திருக்கின்றோம். ஆனால் இன்று யுத்தமில்லாத சூழலில் மாகாணத்திற்கான அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்பான காலத்தில் கூட்டுறவுத்துறையை பலமாக கட்டியெழுப்புவதிலும் வெற்றிகரமாக நடத்திச் செல்வதிலும் பின்னடைவு காணப்படுவது வேதனையான விடயமாகும்.

தேசப்பற்றாளரான காதர் ஹாஜியாரின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தச் சந்தர்ப்பத்தில் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமிழ் பேசும் அனைத்து மக்கள் சார்பாகவும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts:

நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
சிற்றூழியர் நியமனம் அந்தந்த மாவட்டங்களுக்கே வழங்கப்பட வேண்டும்- நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறு...
கிராமிய சமூக கட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில்!