குடாநாட்டிற்கான குடிநீர்வழங்கும் பாரிய திட்டம் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் ஆரம்பம்!

Wednesday, July 22nd, 2020

வடமாராட்சி உப்பாறு பிரதேசத்தில் மழை நீரை சேமித்து யாழ். குடாநாட்டிற்கான குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் விவசாயம் மற்றும நீர்பாசணத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.


குடிநீருக்கான தேவை அதிகமாக காணப்படும் யாழ் குடாநாடு மக்களுக்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அரசினூடாக பல வழிகழில் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை ஒவ்வொன்றும் சுயநல தமிழ் தேசியவாதிகளால் தடுக்கப்பட்டு வந்தது.


ஆனாலும் எவ்வாறாயினும் அத்திட்டதர்தை குடாநாட்டுக்கு பெற்றுக்கொடுத்து மக்களுக்கு தேவையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்குடன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சிகளின் பயனாக இன்றையதினம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் மழை நீரை சேமித்து யாழ். குடாநாட்டிற்கான குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.


இத்திட்டத்தினூடாக சுமார் ஒன்றரை வருடங்களில் மக்கள் பலனடையக்கூடிய ஏதுநிலைகள் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நீர்ப்பாசண மற்றும் விவசாய அமைச்சர சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்ட மீளாய்வுக் கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றது.


குடாநாட்டுக்கான நீர்ப்பாசன முறைமைகள் தொடர்பில் ஆராயப்பட்ட குறித்த கலந்துரையாடல் சரசாலையில் அமைந்துள்ள யாழ் குடாநாட்டிற்கான குடிநீர்வழங்கல் திட்ட பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டத்தினை ஆரமபித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள், நாக விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் விகாராதிபதி மீகஹா யதூரே விமல தேரரிடம் ஆசிகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பபிடத்தக்கது.

Related posts:


கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!
எமது நாட்டின் கல்விக் கொள்கையால் மாணவர்கள் புத்தகப் பைகளைச் சுமந்தே கூனாகிப் போய்விடுகின்றனர் - டக்ள...
வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி நிலங்களில் துரித விவசாய நடவடிக்கை – ஒட்டகப்புலத்தில் அமைச்சர் டக்ள...