கிழக்கு மாகாணத்திற்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Thursday, January 4th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம் (04) மேற்கொண்டுள்ளார்.

பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குறித்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்து போட்டியிடுகின்றது.

அந்த வகையில்  கிழக்கு மாகாணத்தின் குறித்த மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பங்கெடுக்கும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்கள் தொடர்ச்சியாக சில தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இன சமத்துவ உரிமையின் குரலாகவும் இன ஐக்கியத்தின் குரலாகவும் ஒலிப்போம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்...
கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது - நாடாளுமன்றி...
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் - நாடு திரும்பியவர்கள...