கிழக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமும் திறந்துவைப்பு!

Sunday, April 9th, 2023

பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேசத்தில் கட்ஞியின் செயற்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதனிடையே இங்கிணியாகல குளத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த குளத்தில் மீன் பிடித் தொழில் மேற்கொள்வதை ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்வோரின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்ததுடன் அவற்றினை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அமைச்சர் ஆராய்ந்துள்ளார்..

இதேவேளை நக்டா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையினால் இங்கிணியாகலவில் செயற்படுத்தப்படுகின்ற நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் அறுகம்பை பிரதேச கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற இறங்கு துறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேசக் கடற்றொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தர இறங்கு துறையை  அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துள்ளார்.

இந்நிலையில்: பொத்துவில், ஜலால்தீன் சதுக்கம் எனப்படும் கடற்கரை பகுதிக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  சட்டவிரோதமான முறையில் பிரதேச கடற்றொழிலாளர்கள் கரைவலைத் தொழிலை மேற்கொள்வதை கண்டித்ததுடன், குறித்த சட்ட விரோத தொழில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமாயின் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் புதுத்தெம்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மாவட்டத்திற்கான கட்சியின் தலைமைக் காரியாலயம் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
வடக்கில் பாரிய அபிவிருத்தி - ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் த...
குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...
குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...