கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்!

கிழக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால மீன் வளர்ப்பு, பண்ணைகளில் இறால், நண்டு, கடலட்டை வளர்ப்பது போன்ற நீர்வேளாண்மையை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதுடன் நாட்டிற்கான அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்திலும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சரினால் நக்டா நிறுவனத்திற்கு புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை மக்களிடம் காணமுடிகின்றது - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் தேவானந்தாவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ...
வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகள் விஸ்தரிப்பு - அமைச்சர் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
|
|