கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Sunday, October 15th, 2017

கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார்.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன் தலைமையில் இன்றையதினம் குறித்த சந்திப்பு நடைபெற்றது. இதில் பிரதமவிருந்தினராக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்

இதன்போது மாவட்டத்தில் கட்சி சார்ந்து முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். அத்துடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் செயலாளர் நாயகம் பதில்வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் நிர்வாக செயலாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts:

ஊழல் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு,  வட மாகாண முதலமைச்சருக்கு கீழான அமைச்சுக்களையும் விசாரிக்...
தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடடியாக தடை செய்ய அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ் நட...
தேசிய நல்லிணக்கமே நிரந்தர தீர்வுவைக் காண்பதற்கு இருக்கும் ஒரே வழி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...