கிளிநொச்சி மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் சந்திப்பு!

Sunday, April 23rd, 2017

போராட்டங்கள் போராட்டத்திற்கான குறிக்கோளை பண்படுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர அது போராடுபவர்களையே மீண்டும் தாக்கிக்கொள்வதாக அமைந்துவிடக்கூடாது. நாம் பண்படுத்தலூடான போராட்டங்களையே என்றும் ஆதரித்து வந்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் கட்சியின் யாழ். தலைமையலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம்  நடைபெற்றது.

கட்சியின் குறித்தமாவட்ட நிர்வாக  குழு உறுப்பினர்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் –

கடந்த காலங்களில் ஒரு இலக்கைக்கொண்டு பலதரப்பட்ட போராட்ட அமைப்புகளால் உருவாக்கம் பெற்ற எமது இனத்தின் உரிமைப்போராட்டமானது அன்றிருந்த போராட்ட அமைப்புகளுக்கிடையே காணப்பட்ட சகோதர முரண்பாடுகள் காரணமாக அதன் இறுதி இலக்கை எட்டமுடியாது இலங்கை இந்திய ஒப்பந்த காலப்பகுதிக்கு முன்பதாகவே அழிக்கப்பட்டுவிட்டது என்பதே யதார்த்தமாகும்.

ஆனாலும் யுத்தம் தொடர்ந்து நடைபெற்று பல அயிர் உயிர்களையும் உடமைகளையும் காவுகொண்ட பின்னர் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சுமைகளை சுமந்துநிற்கும் எமது மக்களுக்கு இன்று தேவையாகவுள்ளவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டியதே மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரது பணிகளாக இருக்கவேண்டும்.

ஆனால் எமது மக்களுக்கு அதிகளவான அதிகாரங்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உடனடியாக மக்களுக்கு கிடைப்பவற்றை தட்டிக்கழித்துவிட்டு நாளை கிடைப்பதைப்பற்றி உபதேசித்துக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் தான் இன்னமும் எமது மக்கள் பல அசௌகரியங்களை எரிர்நோக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

அனால் நாம் கடந்த காலங்களிலும் சரி இன்றம் சரி மக்களது தேவைகளையும் அவர்களது அபிலாஷைகளையும் மையமாக கொண்டே எமது பணிகளை முன்னெடுத்துவந்து வெற்றிகண்டுளோம். இந்த பயணத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காகவே இன்று பிரதேசம் தோறும் வட்டார ரீதியான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளளோம் என்றார்

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகளற்ற மக்களது பிரச்சினைகள் எதிந்கொள்ளும் பிரச்சினைகள்  மற்றும் மேதின நிகழ்வுகள் தொடர்பாகவும் விரிவாக ஆரயாயப்பட்டது.

குறித்த பிரச்சினைகளுக்கு துறைசார் அதிகாரிகளுக்கு  கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக செயலாளர் நாயகம் தெரிவித்திரந்தார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts:

வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றி...
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு - கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!