கிளிநொச்சி மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – ஒரு இலட்சத்துக்கு அதிக மீன் குஞ்சுகளும் புதுமுறிப்பு குளத்தில் விடப்பட்டது!

Tuesday, January 16th, 2024

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

தொழில் முயற்சியாளர்கள் தாம் கடனை பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ,சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ,மேலதிக அரசாங்க அதிபர் எஸ் -முரளிதரன், வங்கிகளின் முகாமையாளர்கள் ,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

முன்பதாக

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு இன்றையதினம் (16) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்குளத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இரணைமடுக் குளத்தில் முதற் கட்டமாக ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் - கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் டக்ள...
திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது - விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்...
கடற்றொழிலாளர் விடயத்தில் அழுத்தங்கள் அதிகரிக்குமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்துவிட்டு போ...