கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 18th, 2021

கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 நிலைவரம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கந்துரையாடும் விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழல் காரணமாக கைவிடப்பட்டுள்ள கரும்புத் தோட்டக் காணியில் மீண்டும் கரும்பு செய்கை உட்பட்ட பயிர் செய்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிதைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தோனந்தாவினால் சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைம...
இந்திய அரசின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க நடவடிக்கை ...
கடற்றொழிலாளர் விடயத்தில் அழுத்தங்கள் அதிகரிக்குமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்துவிட்டு போ...