கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகள் – அமைச்சர் டகள்ஸ் வழங்கி வைப்பு!

Tuesday, October 12th, 2021

கடலில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை பழதடையாமல் பாதுகாப்பதற்கான ஐஸ் பெட்டிகள் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பூநகரி, நாச்சிக்குடா, கண்டாவளை மற்றும் பளை ஆகிய பிரதேசங்களில் நேற்iறையதினம் (12.10.2021) இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற கடலுணுவுகளின் வீதத்தினை குறைக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறிய படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற சிறுதொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி வைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சிறு கடற்றொழிலாளர்களுக்கான மீன் பெட்டிகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரின் ஒருங்கிணைப்பாளர் வை. தவநாதன், கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதி மோகனகுமார் மற்றும்    பிரதேச கடற்றொழில் உத்தியோகத்தர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

குறித்த ஐஸ் பெட்டி ஒன்றின் மூலம் கடலில் பிடிக்கப்படுகின்ற சுமார் 100 கிலோ மீன்களை பல மணி நேரங்கள் பழுதடையாமல் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கூட்டமைப்பினரின் திட்டமிடப்ப டாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகினறனர்  - வவுனியாவில் டக்ளஸ்...
சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...