கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் – பன்னங்கண்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !
Wednesday, September 13th, 2023மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை நோக்கமாக கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம மேற்கொண்டள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே கிளிநொச்சி, குஞ்சு பரந்தன் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றையதினம் (13.09.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 42 இலட்சம் ரூபாய் செலவில் கிளிநொச்சி உருத்திரபுரம் கிராமத்தில் உருவாக்கப்பட்ட குறித்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்த கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கிருந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை தனது கரங்களினால் வழங்கி வைத்திருந்தார்..
முன்பதாக கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் குடியேறியுள்ள கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சுமார் 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் உருவாக்கப்பட்டுவரும் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் முதல் கட்டமாக இன்று 5 சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், கோரக்கன் கட்டு கிராமத்திலும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|