கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தீடீர் விஜயம் – வியாபார நிலையங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாபில் ஆராய்வு!

Tuesday, May 30th, 2023

கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை அண்டிய பகுதிகளுக்கு அதிகாரிகள் சகிதம் கண்காணிப்பு விஜயமொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த பகுதியில் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து வர்த்தக நிலையங்களை அமைத்து, கடந்த காலங்களில் வாழ்வாதாரத்திற்காக  கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தினை அண்டிய பகுதியில் வியாபார நிலையங்களை அமைத்திருந்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கவேண்டிய மக்கள் நலத் திட்டங்களை,  வினைத்திறனுடன் மேற்கொள்ளவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: