கிளிநொச்சி – புன்னைநீராவியில் 5.3 மில்லியன் ரூபா செலவில் விவசாய உற்பத்தி களஞ்சியசாலை – கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 15th, 2021

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் விவசாய உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலையின் கட்டுமாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்துள்ளார்.

இந்நிலையில் சுமார் 5.3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள களஞ்சியசாலைக்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்துள்ளார்.

கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட்-19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் புன்னைநீராவி கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த களஞ்சியசாலையில் 50 மெற்றிக் தொன் உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்தக் கூடிய வசதியில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  விவசாய அமைச்சினால் மாகாண விவசாயத் திணைக்களத்தினூடாக கொவிட் -19 அவசர நிலைமையின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி முழங்காவிலில் அமையவுள்ள களஞ்சிய சாலைக்கான அடிக்கலையும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்து குறித்த பணிகளை ஆரம்பித்துவைத்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தினையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.

இதனிடையே நாட்டை கட்டியெழுப்பும் முன்னோக்கிய திட்டத்தின் அடிப்படடையில் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்குடன் பூநகரி, ஞானிமடம் மற்றும் செட்டிக்குறிச்சி பிரதசங்களுக்கான நீர் விநியோகக் குழாய்களை பதிக்கும் கட்டுமான வேலைகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து்வைத்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் ...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடு...

மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி ...