கிளிநொச்சியில் AI தொழில் நுட்பத்துடன் விவசாய செய்கை – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 17th, 2024


………..
நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்நிலையில் அதனை முன்னெடுக்க தயாராக உள்ள    தொழில்முனைவோருக்குத்  தேவையான ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் குறித்த திட்டம் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இத்திட்டம் இன்று நாடு முழுவதும் ஜனாதிபதியால் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது

குறிப்பிட்ட 100 இடங்களில் வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகள் முன்னெடுப்பட்டுள்ளன.

இன்நிலையில் கிளிநொச்சியில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட 
இடங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டிருந்த நிலையில் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

வடக்கின் மின்சார சபை எதிர்கொள்ளும் ஆளணிகளின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில்...
கிடைக்கப்பெறுகின்ற வளங்களைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும் - முல்லைத்தீவில் டக்ளஸ் தே...
ஐ.நா சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையா...