கிளிநொச்சியில் வறுமை மாவட்டமாக இருப்பது ஏன்? – உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021

அரசியல் தலைமைகளின் செயற்றிறன் இன்மையே கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைக்கு காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (01.05.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கணிசமானளவு விவசாயத்தினை மையப்படுத்திய கிளிநொச்சி மாவட்டத்தில், திட்டமிடப்பட்ட வகையில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையே வறுமை தொடர்வதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், யுத்தம் நிறைவடைந்து பன்னிரண்டு வருடங்களாகின்ற நிலையில், அதிகாரத்தினை பெற்றுக்கொண்ட அரசியல் தலைமைகள் விவசாயத்தினை விருத்தி செய்து வறுமை ஒழிப்பது தொடர்பான சாத்தியங்களை பற்றி ய அக்கறையின்றி, மக்களை உசுப்பேற்றி தவறாக வழிநடத்துவதில் ஆர்வம் செலுத்தியமையே வறுமை நீடிப்பதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், தற்போது விவசாய நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக கவனம் செலுத்துதல் மற்றும் அறுவடைகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் போன்ற முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வளங்களை இனங்கண்டு  கைத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும்  - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய கடல் வள தொழில் துறை முயற்சிகள் தொடர்பில் துறைசார் அதிகாரி...