கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!

Thursday, October 21st, 2021

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட தளபாட உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தளபாட உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களான மரங்களை எடுத்து வருவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்கள் உட்பட எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் முன்வைத்தனர்.

மேலும் அக்கராயன் கரும்புத் தோட்டக் காணியை பிரதேச மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பகிர்ந்தளித்தமைக்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச மக்களினால் வரவேற்று கௌரவிக்கப்பட்டார்.

யுத்த சூழல் காரணமாக கைவிடப்பட்ட சுமார் 196 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள கரும்புத் தோட்டம் கைவிடப்பட்டிருந்த நிலையில், சில தரப்புக்களினால் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்து நிறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த காணிகளை பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், மேலும் வினைத் திறனுடன் செயற்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

கிளிநொச்சி மக்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காணும் நோக்கிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாட்டில் மானுடம் வாழுகின்றவரை சந்திரசிறி கஜதீர சகோதரயாவின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும் - அனுத...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவட...
வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுக...