கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம்!

Monday, August 24th, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம் ஒன்று கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

“நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்” என்ற கருப் பொருளுடன் இன்று ஆரம்பமாகியுள்ள இந்த இலவச மருத்துவ முகாம் இன்றும் நாளையும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாம் ஊடாக கண் பார்வை, சிறுநீரக கோளாறுகளுக்கான பரிசோதனைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளையும் பொது மக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

குறித்த வேலைத் திட்டம் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராம ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேயிலை உற்பத்தியையும் விரைவில் இழக்க வேண்டி நிலை ஏற்பட்டுவிடும் -  டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் - டக்ளஸ் எம்.ப...
பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொ...