கிராம அபிவிருத்தி தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் அல்வாய் பகுதி மக்கள் கோரிக்கை!

அல்வாய் வடக்கு நக்கீரன் சனசமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது பழைய வேதக்கோயில் வளாகத்தில் சந்தை இயங்கிவந்த நிலையில் அத்தேவாலயத்தை தொல்லியல் திணைக்களம் உரிமைப்படுத்தியுள்ளதாகவும். இதன்காரணமாக குறித்த தேவாலய வளாகத்தில் இயங்கிவந்த சந்தை தற்போது நிரந்தர இடமின்றி வீதி ஓரத்தில் இயங்கிவருவதாகவும் இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு நாளாந்தம் முகங்கொடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே மாவை கலட்டிப் பகுதியைச் சேர்ந்த மக்களும் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது கிராமத்தின் அபிவிருத்திகள் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்புகளின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|