கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் ஆரம்பம்!

Friday, November 6th, 2020

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவர் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

Related posts: