கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 30th, 2021

பூநகரி, கிராஞ்சி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக காணப்பட்ட குழப்ப நிலை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் பிரதேச கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், குறித்த குழப்ப நிலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கிராஞ்சி கடலில் மீன்பிடிப்பதற்கு பிரதேச கடற்படை அதிகாரியினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச கடற்றொழிலார்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மோகன்குமார் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, கடற்றொழில் திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட படகுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், உரிய ஆவணங்கள் வைத்திருக்கின்றவர்கள் இடையூறுகள் இன்றி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கடற்றொழில் அமைச்சரின் கருத்தினையும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உதவிப் பணிப்பாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், கிராஞ்சி கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதில் காணப்பட்ட இடைஞ்சல்கள் நீங்கியுள்ளதாக பிரதேச மீனவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகா...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அட்டூழியங்களுக்கு அமைச்சரவை பத்திரம் – போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாள...

இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்க கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் தேவ...
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
ஊர்காவற்துறை - காரைநகர் போக்குவரத்து தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அவதானம் - விரைவில் சேவைகளை ஆரம்பிக்க ...