கிடைத்த அதிகாரத்தை  மக்கள் சேவைக்காக பிரயோகித்திருக்கின்றேன் – டக்ளஸ் எம்.பி!

Friday, October 6th, 2017

நாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது மக்களின் நலன் கருதியும், எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே பயன்படுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விஷேட அமர்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலம் அவர் தெரிவிக்கையில் –

தென் பகுதி அரசுகள், தமிழ் பேசும் மக்களுக்கு தானாக முன்வந்து செய்கின்ற பணிகளும் இருக்கின்றன. அவை, பொதுவான பணிகள் என்ற வகைக்குள் அடங்கும்.

அதையும் தாண்டி, தமிழ் பேசும் மக்களது தனித்துவமான – உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், தமிழ் மக்களால் அதற்கெனத் தேரந்தெடுக்கப்படுகின்ற பிரதிநிதிகள், தங்களது அக்கறை, ஆற்றல், விவேகம், அர்ப்பணிப்புகளின் மூலமாக தென் பகுதி அரசுகளின் அவதானங்களை வென்று, எமது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்க்கின்ற பொறிமுறைக்குள் தென் பகுதி அரசாங்கங்களை கொண்டு சென்று தீர்வுகளை எட்டியிருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது மக்களின் நலன் கருதியும், எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே பயன்படுத்தி வருகின்றோம்.

அத்துடன், எமக்குக் கிடைத்த அமைச்சுக்களின் ஊடாக எமது மக்கள் உள்ளிட்ட இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் அந்தந்த அமைச்சுகளின் வரையறைகளுக்கு ஏற்ப எம்மாலான பணிகளை நாம் செவ்வனே நிறைவேற்றியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் தென் பகுதி அரசுகளுடன் இணக்க அரசியல் ரீதியில் பங்கெடுத்திருந்த நான், எமது மக்கள் சார்ந்த பிரச்சினைகள், தேவைகள், எமது பகுதிகளின் தேவைகள் தொடர்பில் அந்தந்த அரசத் தலைவர்களின் அவதானங்களுக்கு கொண்டு சென்று, அவற்றை இயலுமான அளவில் தீர்த்து வைத்துள்ளேன்.

குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்தும் வந்திருக்கின்றேன். தற்போதைய நிலையில், அரசுக்கு வெளியில் இருந்து நான் செயற்பட்டு வருவதால், எமது மக்களது தேவைகள், பிரச்சினைகள், எமது பகுதிகளின் தேவைகள் மட்டுமின்றி, நாடாளவிய ரீதியிலான தேவைகள், பிரச்சினைகள் குறித்து இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றேன்.

அதற்கான பலன் கிடைக்கப் பெறுவதையிட்டு, பொறுப்பான தரப்பினருக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே போன்று, எமது மக்கள் நலன்சார்ந்து நான் முன்வைக்கின்ற விடயங்கள் தொடர்பில் உடனடி அவதானங்களைச் செலுத்தி, அவற்றுக்கானத் தீர்வுகளை எட்டுவதில் ஜனாதிபதி மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களதும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களதும் தலைமையிலான இந்த அரசாங்கம் காட்டி வருகின்ற அக்கறை குறித்தும் இந்தச் சந்த்ரப்பத்தில் நான் பாராட்டியாக வேண்டும்.

அந்த வகையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Related posts:

நினைவுக் கல்லை மூடி மறைக்கலாம், எமது உழைப்புடன் நிமிர்ந்து நிற்கும் மண்டபத்தை மூடிமறைக்க முடியாது - ...
வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - செயலாளர் நாயகம் ட...
தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...