கிடைத்த அதிகாரத்தின் மூலம் அழிந்த கிளிநொச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் நாமே கிளி.மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 1st, 2020

!

மரணம் என்னை துரத்திய போதும் நான் நேசிக்கின்ற இந்த மக்களின் அவலப்பட்ட வாழ்விற்கு பிரகாசமான ஒரு வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே நான் தொடர்ந்தும் அரசியலில் பயணிக்கின்றேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று கிளிநொச்சி நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்தத்தின் அழிவுகளைச் சந்தித்த மக்களாகிய நீங்கள் மீண்டும் வாழ்வை
எதிர்கொள்ளும் நம்பிக்கையோடு மீண்டும் குடியேறினீர்கள். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் நீஙகள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் உங்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள், தங்களின் சுகபோகங்களுக்கு உங்களின் வாக்குகளைப் பயன்படுத்தினார்களே தவிர, உங்களின் பிரச்சினைகளை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை.
ஆனால், ஈ.பி.டி.பி. ஆகிய நாங்கள், எங்களுக்கு கிடைத்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி எமது மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை, நாம் கட்டியெழுப்பிய தேசிய நல்லிணக்கத்தினை பயன்படுத்தி மேற்கொண்டோம்.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தினை அழிவுகளில் இருந்து மீட்டெடுப்பதற்காக எமக்கு கிடைத்த நாடாளுமன்ற உறுப்புரிமை ஒன்றை முழுமையாக கிளிநொச்சியில் பயன்படுத்தியிருந்தோம்.
எவ்வாறனினும், எமது மக்களின் தேவைகளோடு ஒப்பிடுகின்றபோது கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த அதிகாரம் போதுமானதல்ல, எனவேதான் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எமது கரங்களை மேலும் பலப்படுத்துமாறு கோருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்

Related posts: