கிடைக்கின்ற சந்தர்பங்களை மக்கள் சாமர்த்தியமாக பயன்படுத்தி நன்மைகளை பெறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, September 30th, 2022

கௌதாரிமனை பிரதேச மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், கௌதாரிமுனை கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தல் போன்ற விடயங்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்றும் குறித்த கிராமத்தில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் நிலைபேறான மின் சக்தி உற்பத்தியை மேற்கொள்ள முன்வந்துள்ள இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான திட்டங்களை எமது மக்கள் சாமர்த்தியமாக பயன்படுத்தி நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கௌதாரிமுனை, கல்முனை பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இறால் பண்ணைக்கான அடிக்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

சுமார் 150 மில்லியன் ரூபாய் தனியார் முதலீட்டில் ஏறக்குறைய 90 ஏக்கர் விஸ்தீரனத்தில் உருவாக்க திட்டமிட்டப்பட்டுள்ள இந்த இறால் பண்தை மூலம் நாட்டிற்கும் பிரதேச மக்களுக்கும  கணிசமானளவு நன்மைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பதாக கெளதாரிமுனை, விநாசியோடை பகுதியில் ஐம்பது மில்லியன் முதலீட்டில்  அமையவுள்ள நவீன இறால் பண்ணை திட்டத்தினையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 10 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வருடம் ஒன்றிற்கு 300 தொன் இறால் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும் அதன்மூலம், வருடம் தோறும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று  மதிபீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும், சமூக மேம்பாட்டு வசதிகளும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: