கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, December 10th, 2017கிடைக்கப்பெற்றுள்ள இந்த வாய்ப்பினை எமது மக்கள் சாதகமாகப் பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களது வாழ்வில் நிச்சயம் நாம் மாற்றத்ததைக் கொண்டுவருவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் நான்கு உள்ளூராட்சி மன்ற கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளை நாம் வென்றெடுத்த பிரதேசங்களில் உட்கட்டுமாணங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகளை செயற்படுத்திக் காட்டியுள்ளோம். அதை அந்தப்பகுதி மக்கள் இன்றும் நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றார்கள்.
எமது கட்சி ஒரே கொள்கை வழிநின்று மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் ஒருபோதும் தயங்கியது கிடையாது.
அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து எமது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை காண்பதில் நாம் தொடர்ச்சியாக அயராது உழைத்துவருகின்றோம்.
அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது அருமையான சந்தர்ப்பமாக எமது மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை மக்கள் சரியாக பயன்படுத்தி எமக்கு ஆதரவுப் பலத்தை தருவார்களேயானால் அதற்கூடாக இம்மாவட்டத்தில் பிரதேச சபைகளை வென்றெடுப்பதனூடாக கட்சியினூடான பணிகளையும் சேவைகளையும் முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் அதற்கு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றும் டக்ஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|