கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, October 19th, 2017

கடந்துவந்த அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்தவகையில் அதற்கான ஜதார்த்தமான வழிமுறைகளை இலக்காகக்கொண்டே நாம் அரசியல் நகர்வுகள் முன்னெடுத்துவருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி மறவன்புலோ மேற்கு பகுதியில் நடைபெற்ற மக்ககள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்ககு அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களுக்கான அரசியல்த் தீர்வு விடயத்திலும் ஒரு வழமான ஒளிமயமான வாழ்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். அத்துடன் மக்கள் நிலையான சமூக பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதனூடாகவே தனிநபர் மட்டுமன்றி தான் சார்ந்தவாழும் சமூகத்தை பொருளாதார வழர்ச்சியில் முன்னேற்றம் காணச்செய்யமுடியும்.

அதற்கு மக்களுடன் நின்று மக்கள் சேவைகளை அர்ப்பணிப்புடனும் சமூக அக்கறையுடனும் உழைப்பதற்கு எமது கட்சியால் தற்போது வட்டார ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வட்டார முறையிலான கட்டமைப்பு தத்தமது பகுதி சமூக பொருளாதார மேம்பாடுகளை உயர்த்துவதற்கு அயராது உழைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், சாவகச்சேரி  பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ, சாவகச்சேரி நகர நிர்வாக செயலாளர் அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

போதையற்ற தேசத்தை உருவாக்குவது எந்த வகையில் சாத்தியமாகும்? - சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி
சூளைமேட்டுச் சம்பவம் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! (ஒல...
விக்கியின் பேச்சுக்கள் மக்களுக்கு எதனை பெற்றுத் தரப்போகின்றன? - யதார்தத்தினை தெளிவுபடுத்தினார் அமைச...