காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் – சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டு கோரிக்கை!

காலம் தாழ்த்தாது பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என சிறுபான்மைக் கட்சிகளின் விஷேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சு அலுவலகத்தில் இன்றையதினம் சிறுபான்மைக் கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் சந்தித்து குறித்த மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
மாகாண சபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடத்துவதா? என்பது குறித்த சர்ச்சையால் மாகாணசபை தேர்;தல் நடத்துவது காலந்தாழ்த்தப்படுவதாக பேசப்பட்டுவரும் நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனநாயகம் பாதிக்கப்படாதவகையில் அதற்கு மதிப்பளித்து மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும்; மாகாணசபை தேர்தலை புதிய முறைப்படி நடத்துவதில் சிக்கல் இருக்கின்றமையால் அதுதொடர்பான திருத்தங்களை கொண்டுவருவதற்கு காலதாமாதம் ஏற்படுகின்றது. இந்நிலையில் பழைய முறைப்படி தேர்தலை நடத்துவதனூடாகவே ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏதிர்வரும் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் குறித்த நிலைப்பாட்டை தாம் வலியுறுத்தவுள்ளதாகவும்; தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|