காலஞ்சென்ற ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Wednesday, December 20th, 2017

காலஞ்சென்ற யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த விகாராதிபதி வணக்கத்திற்குரிய மீகா ஜதுரே ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஶ்ரீநாகவிகார சர்வதேச பௌத்த மத்திய ஸ்தானத்தில் தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் காலமான வணக்கத்திற்குரிய மீகா ஜதுரே ஞானசார தேரர் நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பணி செய்துள்ளார்.

பூதவுடல் தற்போது ஆரியகுளம் சந்தியிலுள்ள ஶ்ரீ நாக விகாரையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சர்வமத குருமார்களும் மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கனவு நிறைவேறியிருந்தால் தலைவிதியையே மாற்றி எழுதியிருப்போம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந...
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க துரித நடவடிக்கை வேண்டும் - டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
படகுகளில் கடற்றொழிலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தொழிலாளர்களே தீர்மானிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...

முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப...