காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Wednesday, November 17th, 2021

தற்போதைய காலச் சூழ்நிலையைத் தாண்டிய முன்னேற்றத்தையும், இக் காலச் சூழ்நிலையிலிருந்து மீட்சி பெறக்கூடிய வகையிலும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்சவனால் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சரியானதை பிழை என்றும், பிழையானதை சரி என்றும் எதிரிக் கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து விமர்சனம் செய்து கொண்டிருப்பதே தமது பணி என நினைத்தச் செயற்படாமல், எதிர்க் கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து தனது பார்வையை நியாயமாக செலுத்த எதிர்க் கட்சிகள் தவறுவதையே இப்போதும், இந்த வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த அவர்களது கருத்துகளிலிருந்து தெரிய வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான எனது கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தற்போதைய காலச் சூழ்நிலையைத் தாண்டிய முன்னேற்றத்தையும், இக் காலச் சூழ்நிலையிலிருந்து மீட்சி பெறக்கூடிய வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ள நிதி அமைச்சர் பசில் ரோஹன ராஜபக்சவின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது.

காலத்தை வெல்கின்ற, பல்வேறு இயற்கை, செயற்கை சவால்களை முறியடித்த, முன்னேற்றகரமான இந்த வரவு – செலவுத் திட்டத்தை எமக்கு தந்துள்ளமை குறித்து பசில் ரோஹன ராஜபக்சவுக்கு எமது மக்கள் சார்பாக எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் இந்த ஆட்சியை நாங்கள் பொறுப்பேற்றது முதல் இன்று வரையில் உலகளாவிய கொடும் அனர்த்தமான கொரோனாவின் பிடி இன்னும் தளர்ந்ததாக இல்லை. கொரோனா அனர்த்தமும் ஓர் இயற்கை அனர்த்தமாக மாறியுள்ளது. ஏனைய இயற்கை அனர்த்தங்கள் சில நாட்களில் அகன்று போனாலும், இது அகலா அனர்த்தமாகவும் தொடர்கிறது. இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் இதுவரையில் நாட்டின் சனத்தொகையில் 80 வீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது மக்களின் உயிர் பாதுகாப்பிற்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகவே இதனை நான் கருதுகின்றேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ள...
சிற்றூழியர் நியமனம் அந்தந்த மாவட்டங்களுக்கே வழங்கப்பட வேண்டும்- நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறு...
விதை உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம் - யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில...