காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, November 25th, 2018

காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான  அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஆரம்பித்துவைத்தார். இன்றையதினம் குறித்த வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேசத்தின் பெருந்திரளான மக்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

முன்பதாக குறித்த நிகழ்விற்கு பிரதம பிருந்தினராக அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஊர்காவற்றுறை பிரதேச மக்களால் பொன்னாடை போத்து மலர் மாலை அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை கிராம மக்கள் நீண்டகாலமாக தமது போக்குவரத்துகளின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த வீதியின் அபிவிருத்தியின் அவசியம் குறித்தும் இப்பகுதி மக்கள் கட்சியிடம் விடுத்திருந்த கோரிக்கைகளின் அடிப்படையில் மக்களது தேவைகளை உணர்ந்து குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான முயற்சிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

இதன் பயனாக 9 கோடி 30 இலட்சம் ரூபா நிதி குறித்த வீதியின் புனரமைப்புக்காக  ஒதுக்கப்பட்டு தற்போது அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது அமைச்சின் இணைப்பாளரும் கட்சியின் ஊடகச் செயலாளருமான தோழர் ஸ்ராலின், அமைச்சின் வடமாகாண இணைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் வேலணை பிரதேச தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

6

5

4

46758570_568431743599796_5026210865695686656_n

2

1

ஆ

எ

டி

Related posts:

நெடுந்தீவில் பணிபுரியும் அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் - நாடாளும...
பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர்...