காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 24th, 2017

கடந்த 2014ஆம் ஆண்டில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுமார் 1,80.000 காணிப் பிணக்குகள் நிலவுவதாகவும், இதில் 1,60.899 பிணக்குகள் வடக்கு மாகாணத்தில் நிலவுவதாகவும் அப்போதைய காணி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தில் தற்போதைய நிலையில், 1,43,881 காணிப் பிணக்குகள் நிலவுவதாகவும், இதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 7,556 பிணக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 34,896 பிணக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 38,033 பிணக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 21,437 பிணக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 41,959 பிணக்குகளும் நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் நிலவுகின்ற காணிப் பிணக்ககுள் தொடர்பில் நான் ஏற்கனவே காணி அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவரகளது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். அதன் பிரகாரம் மேற்படி பிணக்குளைத் தீர்ப்பதற்கு காணி மத்திஸ்த சபை ஒன்றினை அங்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது தொடர்பிலும், யாழ் மாவட்டத்திற்கும் அந்த எற்பாட்டினை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதற்குமாக எமது மக்கள் சார்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த வகையில், ஏனைய மாவட்டங்கள் தொடர்பிலும் காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைளை எடுப்பீர்கள் என நம்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் காணி, நாடாளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு nதிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts: