காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசுகள் அமைத்த விசாரணை ஆணைக்குழுக்களின் பெறுபேறுகள் பூச்சியமாகவே உள்ளது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Saturday, January 28th, 2017

காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கைகளையும், உணர்வுகளையும்  பாசீலனையில் எடுத்துக்கொண்டு, பொறுப்புள்ள அரசென்ற வகையில், தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்.  உண்ணாவிரதமிருக்கும் மக்களின் நியாயத்திற்கான  போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடராதவகையில், அந்த மக்களுடைய நீண்டகாலக் கோரிக்கையைப் பூர்த்தி செய்கின்ற வகையிலேயே அரசின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நாடாளுத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உரையாற்றியது தொடர்பாக செயலாளர் நாயகம் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்,

அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்தின அவர்கள் சபையில் இங்கிருக்கின்றார். எனவே, அவர் முன்னிலையில் நான் எமது மக்களின் முக்கிய கோரிக்கை யொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.  தமிழ் மக்கள் தங்களது நீண்டகால உரிமைப் போராட்டத்தில் பலதையும் பலரையும் இழந்துள்ளார்கள்.  அதன் வெளிப்பாடாகவே  கடந்த நான்கு தினங்களாக வவுனியா மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பில் தீர்வு வேண்டி அவர்களது உறவுகள் உண்ணாவிரதமிருந்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் நானும் பலதையும் பலரையும் இழந்திருக்கின்றேன்.  அந்தவகையில், அந்த மக்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும்,  அவர்களது கவலையை உணர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது.

கடந்த காலங்களில் மாறி மாறி வந்த அரசுகள், காணாமல் போனவர்கள் தொடர்பாக பல ஆணைக்குழுக்களையும், விசாரணைக் குழுக்களையும் உருவாக்கி விசாரணைகளை நடத்தினார்கள்.  அவற்றின் மீது நம்பிக்கை வைத்தும், தமக்கு நியாயம் கிடைக்குமென்றும் எதிர்பார்த்தும் தமிழ் மக்களும் தமது முறைப்பாடுகளையும், வாக்குமூலங்களையும் வழங்கினார்கள். ஆனால், அவற்றின் பெறுபேறுகள் பூச்சியமாகவும் நம்பிக்கையற்றவையாகவுமே இருக்கின்றன.  எனவே, பொறுப்புக் கூறவேண்டிய அரசென்ற வகையில் இந்த அரசு சகலதையும் பாசீலனையில் எடுத்துக்கொண்டு இந்த மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயத்தை வழங்கவேண்டும் என்றும் கூறினார்.

625.500.560.350.160.300.053.800.900.160

Related posts:

வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவேன் - முல்லையில் அமைச்சர் தேவானந்த...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...

முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...
மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் நல்லுறவும் அவசியம் -டக்ளஸ் எம்.பி. விலியுறுத்து!
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும் - ...