காட்டாறுகளை கடந்து வந்தவர்களை கால் தடங்கல்களினால் தடுக்க முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு !

Thursday, January 28th, 2021

காட்டாறுகளை கடந்து வந்த நாங்கள் முன்னெடுக்கும் மக்கள் நலச் செயற்பாடுகளை கால் தடங்கல்களினால் தடுத்து நிறுத்த முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனை கிராமத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் –

மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைத்து வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே தான் செயற்பட்டு வருவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி மற்றும் சிரேஸ்ட அமைச்சர்  என்ற அடிப்படையில் மக்கள் நலச் செயற்பாடுகளில் ஈடு்பட்டு வருவதாகவும் தெரிவித்தாதுள்ளார்.

மேலும், தனது மக்கள் நலச் செயற்பாடுகளை ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோரை தவிர யாருக்கும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தம்பாட்டி பிரதேசத்தில் செழிப்பான கடற்றொழில் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு தேவையான வாய்க்கால் அமைப்பதற்கான அனுமதியை வழங்கிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கடலுணவுகளை விற்பனை செய்வதில் காணப்படும் அசௌகரியங்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடலுணவுகளுக்கான விலை நிர்ணயம் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக இன்றையதினம் ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் இருந்த ஊர்காவற்துறை, மெலிஞ்சுமுனை வீதி புனரமைக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தார்.

அதேபோன்று ஊர்காவற்துறை பிரதேசத்தின் அம்பலவானர் வீதியின் புனரமைப்பதற்கான அடிக்கலையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைகத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மாகாண சபை முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் எமது மக்களின் வறுமை இல்லாது போயிருக்கும் - செயலாளர் நாயக...
டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் - யாழ்ப்பாணத்தி...
கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!