காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதனூடாக வடக்கில் தொழிவாய்ப்புகளையும் அதிகரிக்க முடியும் – டக்ளஸ் எம்.பி!

Friday, March 9th, 2018

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கென இந்திய அரசு முன்வந்துள்ள நிலையில், இந்தத் துறைமுகம் அபிவிருத்தி செய்து முடிக்கப்படுகின்ற தறுவாயில் காங்கேசன்துறை துறைமுகம் மூலமாக இந்தியாவிலிருந்து நேரடியாகப் பொருட்களை இறக்க முடியும் என்பதுடன் எமது பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதோடு பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக் கொடுக்க முடியும். எனவே, இது தொடர்பில்ஆராயுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான கட்டளைகள், தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

இந்தியாவிலிருந்து இலங்கைக்கான உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஏனைய பல்வேறு வகையிலான பொருட்கள் கப்பல் மூலமாக கொழும்புத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்தக் கப்பல் போக்குவரத்தானது கடல் பாதையில் அதிகத் தூரத்தைக் கொண்டதாக இருக்கின்றமையால், மிகவும் இலகுவானதும், குறுகியதுமான கடல் பாதையாக காங்கேசன்துறை துறைமுகத்தைப் பயன்படுத்த முடியும். இது மிகவும் இலாபகரமான வழியுமாகும் என்றே நான் கருதுகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!
கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிந...