காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 24th, 2022

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி  வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியும் என்று வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.

அதேவேளை, பலாலி – திருச்சி, சென்னை இடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம்...
காலநிலை சீர்கேடுகளால் பாதிப்புறும் கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள...
கல்விக்கு விரைவில் மூடுவிழா நடத்தவா தனியார் பாடசாலைகளுக்கு அரச நிதி ஒதுக்கப்படுகின்றது - நாடாளுமன்றி...