காங்கேசன்துறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Monday, January 7th, 2019

பிரதேச மக்களின் நலன்களை முன்னிறுத்தி எமது கட்சியின் வேலைத் திட்டங்களை இலகுபடுத்துவதற்காகவும் மக்கள் தமது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டுவந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காகவுமே எமது கட்சியால் பிரதேச காரியாலயங்கள் அமைக்கப்படுகின்றன.

அந்தவகையில் இந்த வலிகாமம் வடக்கு காரியாலயமும் மக்களுக்கான பணிகளை மேலும் அதிகளவில் மேற்கொள்ள வழிவகை செய்யும் என எதிர்பார்ப்பதாக என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச அரசியல் காரியாலயம் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை வீதியில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

நேற்றையதினம் காங்கேசன்துறை பிரதான வீதியில் மாவிட்டபுரம் அரசடி பகுதியில் குறித்த அலுவலகம் செயலாளர் நாயகம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயராஜசிங்கம் (அன்பு) உள்ளிட்ட பல கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20190106_164953

IMG_20190106_165111

IMG_20190106_165354

IMG_20190106_165938

IMG_20190106_170825

Related posts:

கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - கட்சியின் செயற்பாட...
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா – நா...
தமிழ் மக்களின் தேவைகளுள் இன்னும் எத்தனையோ விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கின்றது – அமைச்சர் டக்...