காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு!

Thursday, January 6th, 2022

காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிடப்பட்டுள்ளது.

காக்கைதீவு மீன் சந்தை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே இந்த வேண்டுகோள் முனாவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த முறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்றத்தின் ஈ. பி.டி.பி. உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

அத்துன் மின் விளக்கு பொருத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதேச கடற்றொழில் செயற்பாட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்

Related posts:

சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் - செயலாளர்...
கோணாவில் மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபாலடி சில்வா பங்கேற்புடன் திறந்துவைக்கப்பட்டது கே.கே.எஸ் பய...