கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முடியும்? –  டக்ளஸ் தேவானந்தா!

006 Friday, March 9th, 2018

மாற்றாந்தாய் மனப்பான்மைகள் எமது கல்விக் கொள்கையில் இருக்கின்ற நிலையில், சமச்சீரான ஒரு சமூகத்தை எப்படி உருவாக்கப் முடியும்;? என்பது குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்

வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழான கட்டளைகள், தேசிய கல்வி ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரிவிக்கையில் –

இந்து சமய பாட நூல்களை எடுத்துக் கொண்டால் கருத்துப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும், நீண்ட சொற் தொடர்களும், பாடங்களில் கடினத் தன்மையும் காணப்படுகின்றது. இந்த நிலையில், பாடசாலை பாட நூல்களில் இந்து சமயத்தைப் படிக்கின்ற மாணாக்கர்கள் அந்த பாடத்தை கைவிட்டு ஒதுங்கிப் போய்விடுவார்களோ? என்ற அச்சம் எமது சமூகத்தில் காணப்படுகின்றது. பாடத் திட்டங்களைத் தயாரிக்கின்றபோது ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடங் கொடுக்கக் கூடாது. இந்து சமய பாட நூல்களில் பிழைகள் சரி செய்யப்பட்டு, இலகுத் தன்மை பேணப்பட வேண்டியுள்ளது.

அடுத்தது, தமிழ் பாடசாலை பாடநூல்களில் காணப்படுகின்ற எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள், வசனப் பிழைகள் ஏராளம். தேசிய கல்வி ஆணைக்குழுவின் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்திலேயே ‘இலங்கை’ (இலங்கi) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதிலேயே எழுத்துப் பிழை காணப்படும் நிலையில,; பாடசாலை பாடநூல்களில் காணப்படுவது புதுமை ஒன்றுமில்லை என சிலர் கூறலாம்.

‘விரிவான ஒரு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளைச் செய்தல்’ இந்த ஆணைக்குழுவினது ஒரு பணியாகும் என்று கூறப்படுகின்றது. கடந்த வருட ஆரம்பத்தில் தேசியக் கல்விக் கொள்கைக்கான முன்மொழிவொன்று ஜனாதிபதி அவர்களிடம் கைளிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. அதன் பின்னர், அதாவது கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் பின்லாந்தின் கல்விப் பாரம்பரியம் தொடர்பில் ஆராய்வதற்கென பிரதமர் தலைமையில் ஒரு குழு பின்லாந்து சென்றதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

‘இலங்கையின் கல்விக் கொள்கை வகுக்கப்பட்ட காலத்தில் இருந்தது போன்றே இதுவரையும் தொடர்கின்றது. இதில், காலத்துக்குப் பொருத்தமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக 2015 ஜனவரி 08ஆம்; திகதி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பல தடவைகள் கூறின. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பின்லாந்து விஜயம் மற்றும்; அந்நாட்டு கல்வித் துறையினருடனான கலந்துரையாடல்கள் இதனை சாத்தியப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’ என மேற்படி  பின்லாந்து விஜயத்தில் கலந்து கொண்டிருந்த இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவித்திருந்ததாக அப்போது அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இத்தகையதொரு நிலையில், தேசிய கல்வி ஆணைக்குழுவும் தேசிய கல்வி நிறுவனமும் தயாரித்து ஜனாதிபதி அவர்களிடம் கையளித்த தேசிய கல்விக் கொள்கை முன்மொழிவுக்கு என்னவாயிற்று? அது பற்றி பிரதமருக்குத் தெரியாதா? கல்வி அமைச்சருக்குத் தெரியாதா? அல்லது பின்னலாந்து கல்வி முறைமை தொடர்பில் மேற்படி ஆணைக்குழுவுக்குத் தெரியாதா? போன்ற கேள்விகள் எழுகின்றன.


ஈ.பி.டி.பி மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டிக்கின்றோம்.
காணாமல்போன இளம் குடும்பஸ்தரின் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில்ஆறுதல்!
நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் - உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவா...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் -  டக்ளஸ் தேவானந...
கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோ...