கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? – நாடாளும்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, July 23rd, 2019

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரம் உயர்த்தல் தொடர்பிலான விடயத்திற்கு இன்று என்ன நேர்ந்திருக்கின்றது? என்பது தொடர்பில் எவ்விதமான பதிலும் இல்லை. அங்கே உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு இருந்தபோது போய் வாக்குறுதி வழங்கியவர்கள் கன்னியா நீராவியடி கந்தப்பளை என வரும்போது என்ன செய்தார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியும்.

இறுதியாக இந்த அரசின்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது இந்த அரசை மீண்டும் தாங்கிப் பிடித்த தமிழ்த் தரப்பினர் கல்முனை வடக்கு உப பிரதேசத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் எழுத்து மூல ஒப்பந்தம் ஒன்றை அரசுடன் செய்து கொண்டுதான் அரசை தாங்கிப் பிடித்ததாகக் கூறினார்கள். இன்று இதே அரசைக் கொண்டு ஒரு கணக்காளரை இந்தத் தமிழ்த் தரப்பினரால் நியமித்துக் கொள்வதற்கு முடிந்ததா? அதுவும் இல்லை.

இங்கே நான் எந்தத் தரப்பினருக்கும் அநியாயம் இழைக்கப்பட வேண்டும் எனக் கதைக்கவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் நியாயம் வேண்டும் என்ற நிலையில் இருந்தே கதைக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற  நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கல்முனை வடக்கு உப பிரதேச சபையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையானது அம்மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருக்கின்றது. ஓர் இரவில் இதோ முடிந்துவிடும் இந்தப் பிரச்சினை எனக் கூறி இந்த அரசை இந்த முறையும் தாங்கிப் பிடித்தவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? என்றே கேட்கத் தோன்றுகின்றது.

இப்படியான பித்தலாட்ட அரசியலில் தொடர்ந்து இவர்கள் ஈடுபட்டு வருவதன் காரணமாகத்தான் அண்மையில் மட்டக்களப்பிற்குப் போய் விரட்டப்;பட்டு இரவோடிவராக தங்குவதற்கு இடம்தேடி களுவாஞ்சிக்குடி வரை ஓட வேண்டிய நிலை இவர்களுக்கு எற்பட்டது என்ற நிலைமையில்கூட இவர்கள் இனிமேல் எமது மக்களது நலன் கருதிய அரசியலில் ஈடுபடாவிட்டால் இவர்களை வேறு எவ்வாறு அழைப்பது? என்றே எமது மக்களுக்குத் தெரியவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

Related posts:

எமது மக்களின் வாழிடங்கள் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துக் கிடக்கின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸிடம் சுப்பி...