கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 24th, 2021

அகிலத்தின் ஒளியாக கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நத்தார் தினம் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகி நீடித்து நிலவும் நாளாக கனியட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நத்தார் வாழ்த்து செய்தியில்,..

நான் என்றும் இடையறாது உங்களுடனேயே இருப்பவன்,..அக்கிரமங்களில் நீங்கள் அகப்பட்டு தவித்த போது,..நீங்கள் சுமந்த துயரச்சிலுவைகளை நாமும் சுமந்தவர்கள்,..இருளில் நீங்கள் நடவாமல் இருக்கவும், உங்கள் வாழ்விடங்கள் தோறும் நித்திய ஒளி உண்டாகவும்,..எழிலார்ந்த உரிமை வாழ்வை உங்களுக்கு உருவாக்கி கொடுக்கவும்,..நாம் வகுத்த கட்டாய கட்டளைகளோடு இன்னமும் உங்கள் மத்தியில் நிற்பவர்கள் நாம்.

நான் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்  நித்திய சமத்துவ சமாதானத்தை எமது மண்ணில் உருவாக்கும்

எனது சிந்தனைகள் ஒரு போதும் ஒழிந்து போகாது,. ஏனெனில்,.. அவை நடை முறை சாத்தியமானவை.

நாம் தோற்றுப்போன இன சமூகமல்ல, மாறாக கற்பாறைகளில் விதைக்கப்பட்ட தவறான வழிமுறைகளே இங்கு தோற்றுப்போனவை.

யுத்தம் தந்த இரத்தப்பலிகளில் இருந்து நீங்கள் மீண்டு நிமிரவும் சாம்பல் மேட்டில் இருந்து உங்கள் சமாதான சகவாழ்வு திரும்பவும் காலமொன்று கனிந்து வந்தது போல்,..எமது பூமியில் இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லா இடர்களும்  இல்லாதொழிந்து போகும்,..துயருறுவோர் ஆறுதல் பெறுவர்,. கனிவுடையோர் தமக்கான தேசத்தை உரிமை சொத்தாகுவர்,..நோய் பிணிகள் இல்லாத, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி இல்லாத,

யாரும் யாரையும் அடிமை கொள்ளாத புதியதொரு சமாதான இராச்சியத்தையே நாம் தொடர்ந்தும் விரும்புவோம்.

சத்தியத்தின் வழியில் சமவுரிமையை நேசிக்கும் எங்களை நேசியுங்கள்.,நீங்களும் நேசிக்கப்படுவீர்கள். எல்லா இடங்களிலும் ஒளி உண்டாகும்.எமது சாத்தியமான வழிமுறையில் நீதியை தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். அன்பும் கருனையும் அவனியை ஆளட்டும்!

இவ்வாறு தனது நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் ஒவ்வொரு இல்லங்கள் தோறும் நாளைய நம்பிக்கையோடு மகிழ்ச்சி நிலவட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

000

Related posts:

நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீனாபிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமரால்...
வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை - யாழ் ஒருங்கி...