“கம்பரலிய” திட்டம் கண்கட்டி வித்தையாகவே நடந்தேறுகின்றது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Monday, April 1st, 2019தமிழ் மக்களின் பிரச்சினைகளை – தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு, தமிழ் அரசியல்வாதிகளின் தேவைகளைத் தீர்ப்பது என்பது வேறு.
இந்த ‘கம்பெரலிய’ எனப்படுகின்ற ‘கிராமப் பிறழ்வு’ வேலைத்திட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் இந்தத் தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வந்திருந்தது. அந்த வகையில் யார்? யாருக்கு? எவ்வளவு தொகையினை, எந்தெந்த வேலைத் திட்டத்திற்காக ஒதுக்கினீர்கள்? என்றொரு கேள்வியை இதே நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்டிருந்தேன். அதற்கு இதுவரையில் பதிலில்லை.
அதற்கான பதில் வெளிவந்தால், இந்தத் தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பெற்ற தொகை வெளிவந்திருக்கும். அத் தொகைகளை எந்தெந்த வேலைத் திட்டங்களுக்காக செலவு செய்தார்கள் அல்லது செலவே செய்ய வில்லையா என்ற விபரங்களும் தெரிய வந்திருக்கும். எனவே, அது தெரிய வரக்கூடாது என்பதற்காக இதே தமிழ்த் தரப்பு அதற்கான பதிலை இழுத்தடிக்குமாறு கூறியிருக்கலாம். அப்படியான திருகுதாள வேலைகளை செய்வதில் இவர்களுக்கு நிகராக இன்னமும் இவர்களே இருக்கின்றனர்.
எனவே, இந்தத் தமிழ்த் தரப்பினரை சந்தோசப்படுத்துகின்றோம் என்பதுடன் நின்றுவிடாது, எமது மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
|
|