கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, June 28th, 2018

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக நலன்கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதனூடாகவே எமது சமூகத்தில் இன்னொரு றெஜினாவை கொடிய வன்முறைக்கு காவுகொடுக்காது பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(28) வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிச் சிறுமி றெஜினாவின் மரணத்துக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்று எமது மக்களது கலாசாரங்களை சீரழித்தக்கொண்டிருக்கின்ற சமூக சீரழிவுகளை இல்லாதொழிப்பதற்கு மக்களின் ஆதரவும் அவசியம். அரசியல் ரீதியாக சொல்லப்படுகிறது  இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்றும் இதை தொடர்ந்து நடக்க விடக்கூடாது என்றும்.ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

ஆதலால் இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் இந்த போதை பொருள் பாவனையை நிறுத்த வேண்டும். இதில் பொதுமக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பங்குண்டு. இந்த இரண்டும் ஒன்று சேரும் போதே இலகுவாக தீர்வுகாணமுடியும்.

ஏனெனில் இது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் இது நடைபெறுகின்றது. இன்று நடந்தேறியுள்ள றெஜினாவின் கொலையே கடைசியானது என எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் எங்கும் நடைபெறாது இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்த தீர்வுதான் இந்த றெஜினா என்ற குழந்தையின் கொலைக்கு மட்டுமல்லாது இவ்வாறான சம்பவங்களுக்கு நீண்டகால தீர்வாக அமையும்.

நான் இன்று மத்திய அரசின் முகவராகவும் இருக்கவில்லை மாகாண அரசின் முகவராகவும் இருக்கவில்லை. அவ்வாறு நான் இன்று இருந்திருந்தால் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைக் காண்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்திருப்பேன்.

அந்தவகையில் கட்சிகள் பேதங்களால் அரசியல் காரணங்களை கொண்டதாக பிரச்சினைகளை அணுகாது சமூக நலன் கருதி அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் நிச்சயம் தீர்வுகாணமுடியும்.

அந்தவகையில் கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் அதற்காக சகலரும் கட்சி போதங்கள் இன்றி உழைக்கவேண்டும் என்றும் அதிகாரத்திலுள்ளவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக முன்வரவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் வலிமேற்கு நிர்வாக செயாலளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_20180628_112813

IMG_20180628_111113

IMG_20180628_111116

IMG_20180628_112822

IMG_20180628_121106

IMG_20180628_101337

IMG_20180628_101328

Related posts:


உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம்...
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
தேர்தல்கால பெறுபேறுகளை கொண்டு மக்களது அபிலாஷைகளை புறந்தள்ளப் போவதில்லை -  வவுனியாவில் டக்ளஸ் எம்.பி ...